Translate

ஞாயிறு, 31 மார்ச், 2013

சித்தர் பொக்கிஷம் - குழு அறிமுகம் Siththar Pokkisam - Team

சித்தர் பொக்கிஷம் - குழு  அறிமுகம் 
சித்தர் பொக்கிஷம் - குழு  அறிமுகம் அன்புடைய நண்பர்களே வணக்கம் !

நம் தமிழ்மரபில் தோன்றிய சித்தர் பெருமக்கள் பேரருள் கொண்ட இறைவனி டம் வேண்டி,தங்கள் ஞானத்தால் கண்டறிந்த அருட் கலைகளான யோகம், ஞானம், இரசவாதம், வைத்தியம், சோதிடம், மந்திரம், சரகலை, பஞ்சபட்சி, முப்பு, காயகற்பம், வர்மம் போன்ற அரிய கலைகளை தங்களின் பாரம்பரிய வழித்தோன்றல்களான சீடர்களும், மனித குலமும் பயன் பெரும் வகையில் “ஓலைச்சுவடி"களில் பாடல்கள் வடிவில் பல லட்சம் பாடல்களாக வடித்துள்ள னர்.இவைகள் காலப்போக்கில் சுவடிகளில் உள்ளவைகளை படி எடுத்து பதிவு செய்யாமலும் சரியான வழிமுறைகளில் பாதுகாத்து பராமரிக்காமல் விட்ட தால் அழிந்தவை ஏராளம். அனாலும் இன்றும் பல ஆன்மீக மடாலயங்களி லும், பாரம்பரிய சித்த மருத்துவர்களிடமும், பரம்பரை ஜோதிடர்களிடமும், தமிழறிஞர்களிடமும், சித்தர் கலை ஆய்வாளர்களிடமும் தமிழகத்திலும், மற்றும் அதனைச்சுற்றியுள்ள மாநிலங்களிலும் பழமையான ஓலைச்சுவடி களாகவும்,பல ஆண்டுகளுக்கு முன் பதிப்பித்த நூல்களும் ஏராளமானவை உள்ளன.

மேலும் சித்தர் கலைகளின் அரிய சூட்சும பரிபாஷை விளக்கங்கள், தொன்று தொட்டு,இன்று வரை குரு சீட வழியில் போதிக்கப்பட்டு வரப்படுகின்றது. 


இவைகளில் உள்ள அரிய வாழ்வியல் தத்துவங்களையும்,நோய்கள் தோன்றா நெறிமுறைகளையும், நோய்கள் தீர்க்கும் மருந்து முறை களையும், பஞ்சபூத - நவக்கிரக - பிரபஞ்ச இரகசிய விதிகளையும், அண்டத்தில் உள்ளதே பிண்டத் தில் என்ற சூட்சும விளக்கங்களையும், பிறவிமுக்தி ஞானம் பெறவும்,பேரருள் இறைஞானம் அடைவதற்கும் மேற்கண்ட சித்தர் கலை களில் உள்ள அரிய கருத்துக்களை பதிவு செய்யவும், பகிர்ந்து கொள்ளவும்,  நன்மை பெறவும், சித்தர் பாடல்களில் உள்ள பரிபாஷை மற்றும் சந்தேகங்களுக்கான விளக்கங்களும், சித்தர் குருகுல பாரம்பரிய வழி முறைகளில் கையாண்டு வரும் அரிய இரகசியங்களை தொடர்ந்து பதிவு செய்கின்றோம்.

நம் பழந்தமிழரின் மெய்யறிவு சார்ந்த கருத்துக்களையும், சித்தர்களின் கலைகள், தத்துவங்கள், அறிவியல் ஆய்வு சார்ந்த கருத்துக்களை உலகிலுள்ள தமிழறிந்தோர் பயன் பெறவே பதிவு செய்கின்றோம். !


சித்தர்களின் புகழை பாரெங்கும் விதைப்போம் நன்றி !நன்றி !
மெய்திரு, இமயகிரி சித்தர்
சித்தர் வேதா குருகுலம்
புஷ்பக் நகர், A.M ரோடு
ஸ்ரீரங்கம் P.O – திருச்சி D.T - 620006
தமிழ்நாடு – இந்தியா

அகத்தியர் குருகுலம் யோக ஞான பீடம்
அகஸ்தியர் புரம் , சிறுமலை புதூர்
திண்டுக்கல் – D.T
தமிழ்நாடு – இந்தியா

www.siddharprapanjam.org        .
செல் :98654302359095590855 - 9655688786
3 கருத்துகள்:

 1. எனக்கு ஓலைசுவடி ebook வடிவில்
  simbusivam@gmail.com அனுபுபவும்

  பதிலளிநீக்கு
 2. உலக சித்தர்கள் தினத்தை முன்னிட்டு ஒரு சிறப்பு மாநாடு.

  பிராணா அறக்கட்டளையின்
  சித்தர்கள் ஆலயம்
  126 சித்தர்களின் ஜீவஜோதி மையம் நடத்தும்

  ஜீவசமாதியிலிருந்து உயிர்த்தெழும் சித்தர்களை வரவேற்கும் நிகழ்வும்,
  தன்னுள்ளே தன்னை கண்டு உணரும் மெஞ்ஞான பயிற்சி மாநாடும்

  ஆம்.. சித்தர்கள் உயிர்த்தெழும் வருடம். கலியுகம் 5116‍‍ - ஸ்ரீஜெய வருடம்

  நடைபெறும் நாள் ‍‍- 13‍‍-04-2014
  சூரிய நாள் - ஞாயிற்றுக்கிழமை - கலியுகம் 5115 - ஸ்ரீ விஜய வருடம்
  நேரம் - காலை சரியாக 9.50 மணி முதல் மாலை 5.00 மணி வரை
  இடம் - பாலமந்திர் ஜெர்மன் ஹால், எண்.17, பிரகாசம் சாலை, தியாகராய நகர், சென்னை-17.

  https://www.facebook.com/Siddhargalaalayam.org

  பதிலளிநீக்கு