Translate

செவ்வாய், 2 ஏப்ரல், 2013

பொன்னூமத்தை மூலிகை மகத்துவம் - ரசவாதம் - மிருக வசியம் - pon umathai -Rasavatham

பொன்னூமத்தை மூலிகை மகத்துவம் - ரசவாதம் - மிருக வசியம் 





பொன்னூமத்தை மூலிகை மகத்துவம் - ரசவாதம் - மிருக வசியம் 


சித்தர்கள்,முனிவர்கள்,ரிஷிகள் போன்றோர் காடுகளிலும், மலைகளி லும், வனங்களிலும் குடில் அமைத்தும்,குகைகளிலும் தவம்  இயற்றி வாழ்ந்து வரும் காலங்களில் கொடிய மிருகங்கள் மற்றும் விஷ ஜந்துக்களின் இடர் பாடுகளில் இருந்து காத்துக் கொள்ள,கட்டுக்குள் கொண்டு வர பல அதிசய மூலிகைகளையும்,சூட்சும மந்திரங்களையும் கையாண்டு வந்துள்ளனர்.


அவைகளில் ஒன்றுதான் "பொன் ஊமத்தை" என்ற மூலிகை ஆகும். இம் மூலிகையைப் பற்றிய அகத்தியர் பெருமான் பாடல்:-

காணவே பொன்னி னூமத்தை மூலி 
கருவான மூலியடா கந்தர் மூலி 
பாணமாம் பச்சையது தழையினாலே
பாருலகில் சொர்ணமதைக் காணலாகும் 
தோணவே சாரதனைப் பிழிந்துமல்லோ
தோராமல் ரவிதனிலே காயவைத்து 
மாணவே செம்புருக்கி கிராசமீய
மன்னவனே பசுமையடா தங்கந்தானே

தங்கமா மூலியது தழைதானாகும் 
சாங்கமுடன் சொர்ணமென்ற பீசமாகும் 
சிங்கமதைத் தான்மயக்குந் தழை தானாகும் 
புகழான   காயாதி    இதற்கொவ்வாது
எங்கேனுந் தேடியுழைந் தலைந்திட்டாலும்
என்மகனே விதியாளி காண்பான் தானே 

காண்பானே தழையினது மகிமையாலே 
காவனத்தில் வசிக்கின்ற மிருகமெல்லாம் 
ஆண்பான மதமடங்கி தன்முன்னாக 
அப்பனே எதிர் வணங்கி பணியும் பாரு 
சாண் பாம்பே யானாலு முந்தனுக்கு
சட்டமுடன் ஏவலுக்கு முன்னாய் நின்று 
வீண்பாக முறையாம லடிவணங்கி  
வித்தகனே முறைபாடாய் நடக்கும் பாரே

இந்த அதிசய பொன்னூமத்தை மூலிகை கந்தர் முருகனின் மூலிகை ஆகும்.இம்மூலிகையால் ரசவாதம் செய்யலாம்.இம்மூலிகையை இடித்து பிழிந்து சாரெடுத்து ரவி என்ற வெயிலில் காய விடவும்.பின்பு 
தாமிரம் என்ற செம்பை உருக்கி இதில் சாய்க்க வேண்டும்.


 இந்த செம்பை மீண்டும் உருக்கி சாய்க்க வேண்டும்.ஒவ்வொரு முறை யும் புதுச்சாரு ஊற்ற வேண்டும்.இது போல் பதினொரு முறை உருக்கி சாய்க்க பசுமையான தங்கமாகும்.


இம் மூலிகையின் வாசனையால் சிங்கம் மயங்கும்,யானை முதல் அனைத்து மிருகங்களும் வசியமாகும்.எதிர் வந்தாலும் அடிவணங்கி பணியும்.பாம்பு போன்ற ஜந்துக்கள் நம் சொல்லுக்கு கட்டுப் படும். 


அஷ்ட சித்தி இம்மூலிகையால் எளிதில் கைகூடும்.காயாதி கற்ப மருந்துகள் இதற்கு ஈடாகாது.இம்மூலிகையை எங்கெங்கு தேடி அலைந்திட்டாலும் பிராப்தம் மற்றும் விதி இருந்தால் மட்டுமே கிட்டும்.


நன்றி !
மெய்திரு, இமயகிரி சித்தர்
சித்தர் வேதா குருகுலம்
புஷ்பக் நகர், A.M ரோடு
ஸ்ரீரங்கம் P.O – திருச்சி D.T - 620006
தமிழ்நாடு – இந்தியா

அகத்தியர் குருகுலம் யோக ஞான பீடம்
அகஸ்தியர் புரம் , சிறுமலை புதூர்
திண்டுக்கல் – D.T
தமிழ்நாடு – இந்தியா

www.siddharprapanjam.org        .
செல் :98654302359095590855 - 9655688786





      
     
          

6 கருத்துகள்:

  1. இதை பறிக்கும் போது சாப நிவர்த்தி மந்திரங்கள் ஏதும் சொல்ல வேண்டுமா

    பதிலளிநீக்கு
  2. கல்யாணகுமார் வீரபாண்டியன்

    பொதுவாக சித்தர் நெறியில் மூலிகைகளை கையாளும் போது
    மூலிகை சாப நிவர்த்தி அவசியம் தேவைப் படும்.

    கர்மவினை நோய்கள்,மாந்திரீகம்,ரசவாதம்,போன்றவைகளுக்கு
    மூலிகைகளை எடுக்கும் போது கண்டிப்பாக "சாப நிவர்த்தி"செய்ய
    வேண்டும்.

    "மூலிகை சாப நிவர்த்தி" செய்வதில் பத்து வித நிலைகள் உள்ளன.
    இவைகளை முறைப்படி கடை பிடித்து எடுக்க வேண்டும்.

    இதன் இரகசியங்களை தக்கதொரு குருவிடம் நேரடி பயிற்சியில்
    அறிந்து கொள்ளுங்கள்.

    நன்றி !
    சித்தர் பொக்கிஷம் குழு -blog
    siththarpokkisam@gmail.com

    பதிலளிநீக்கு
  3. nalla thagaval pakirvu, melum valarchiyadaiya irai arul puriyattum

    பதிலளிநீக்கு
  4. இந்த பொன்னுமத்தை செடி என்கிட்டே இருக்கு. நான் பாக்கியசாலி

    பதிலளிநீக்கு
  5. ethu unmai alla unmayana sakthi un guruvidam ullathu athu veandumenil u asai thorakka veadum

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் அன்புடையீர்,

    ஒம் அகத்திசாய நம !!!

    கருணை உள்ளம் கொண்ட கும்ப முனியின் அருளால் வைகாசி வளர்பிறையில் இருந்து, கோயம்புத்தூர் அருகே உள்ள கல்லார் அகத்தியர் ஞான பீடத்தில் அகத்தியர் ஜீவ அருள் நாடியில் அருள்வாக்கு வருவதாக தகவல் உறுதி படுத்தப்பட்டு உள்ளது.

    தொடர்பிற்கு மாதாஜி சரோஜினி - 9842550987

    கல்லார் அகத்தியர் ஞான பீட முகவரி :
    Sri Agathiar Gnana peedam
    2/464-E, Agathiar Nagar,Thoorippalam
    Kallar-641305,Mettupalayam,Coimbatore Dt, Tamilnadu, India
    PH:98420 27383, 98425 50987.
    ( மேட்டுப்பாளையம் to ஊட்டி மெயின் ரோட்டில், மேட்டுப்பாளையத்தில் இருந்து 10 வது கிலோமீட்டரில் கல்லார் உள்ளது. )

    நாடி பார்க்கும் நாள்:சனிக்கிழமை மட்டும்
    நேரம் :9 மணி முதல் 2 மணி வரை
    கட்டணம்:500/- ரூபாய்.
    ஒம் அகத்திசாய நம !!!
    ஒம் அகத்திசாய நம !!!
    ஒம் அகத்திசாய நம !!!

    பதிலளிநீக்கு